ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணும்….. ஜெபிக்கணுமே
1.
ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம்
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் – ஜெப
2.
உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே – ஜெப
3.
திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே – ஜெப
4.
முழங்கால்கள் முடங்கணுமே’
கண்கள் எல்லாம் குளமாகணுமே என் – ஜெப
5.
தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே – ஜெப
6.
உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே – ஜெப